இந்தியாவின் முதல் உலகளாவிய பொழுதுபோக்கு நிறுவனமான பிரமிட் சாய்மீரா குழுமமும், மாற்று கலாச்சாரப் படைப்பு அமைப்புமான ஞானபாநுவும் இணைந்து திரைப்பட வளர்ச்சிக்கான புதுமையான இயக்கம் ஒன்றினை தொடங்குகிறார்கள். 'ஒற்றை ரீல் இயக்கம்' என்று பெயரிடப்பட்டுள்ள புதிய திறமைசாலிகளையும், மாற்று சிந்தனைகளையும் சமூகத்துக்கு அறிமுகப்படுத்துவது இவ்வியக்கத்தின் நோக்கமாக இருக்கும். பிரபல எழுத்தாளர் ஞாநி மற்றும் பிரமிட் சாய்மீரா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் திரு. பி.எஸ்.சாமிநாதன் ஆகியோர் ஒற்றை ரீல் இயக்கத்தின் நிறுவனர்கள்.
இவ்வியக்கம் மூலமாக ஒரு ரீல் நீளமுள்ள படங்கள் தயாரிக்கப்பட்டு திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்படும். பிரதானப்படம் தொடங்குவதற்கு முன்பாக திரையரங்கு ரசிகர்களுக்கு போனஸாக இந்த பத்து நிமிடப் படங்கள் வழங்கப்படும். இதன்மூலமாக பல திறமைசாலிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்த வாய்ப்பாக அமையும். திரைத்துறை வளர்ச்சிக்கும் இது இன்றியமையாத இயக்கமாக மாறும் நிலை ஏற்படும் என நம்பப்படுகிறது. பல நூறு திரையரங்குகளை தன் வசம் வைத்திருக்கும் பிரமிட் சாய்மீரா குழுமம் காரணமாகவே இது சாத்தியப்படுகிறது.
இவ்வியக்கத்தின் முதல் படைப்பு டிசம்பர் 28, 2007 அன்று திரையரங்குகளில் திரையிடப்படும். 112 ஆண்டுகளுக்கு முன்பாக சினிமாவின் முதல் ரீலை லூமியர் சகோதரர்கள் உலகுக்கு அர்ப்பணித்த நாள் அது. அந்த வரலாற்றினை நினைவுறுத்தும் விதமாக 'ஒற்றை ரீல் இயக்கம்' தனது முதல் படத்தை 28-12-2007 அன்று தமிழகம் தோறும் 112 திரையரங்குகளில் 112 படைப்பாளிகளால் ஒரே நேரத்தில் தொடங்கி வைக்கப்படும்.
இவ்வியக்கம் படைத்திருக்கும் முதல்படமான 'திருமதி ஜேம்ஸ் இப்போது என்ன செய்யவேண்டும்' அந்நாளில் திரையிடப்படும். இப்படத்தை இயக்கித் தயாரித்திருப்பவர் முற்போக்கு சிந்தனையாளர் திரு. ஞாநி. பிரபல எழுத்தாளர் திலீப் குமார் எழுதியிருக்கும் கதைக்கு பி.எஸ்.தரன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இ.பொ.சிவமதியின் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இப்படத்ட்துக்கு இசை என்.சி.அனில். ரோஹிணி, நீல்சன் நடித்திருக்கும் இந்த பத்தி நிமிட படம் இரண்டே ஷாட்டுகளில் ஒரே டேக்கில் எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. பத்து நிமிடமும் நீல்சன் பேசிக்கொண்டே இருப்பதும், ரோஹிணி ஒரு வார்த்தையும் கூட பேசாமல் நடித்திருப்பதுமாக நவீன யுத்தியில் படமாக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தின் தயாரிப்பில் பங்குபெற்றவர்களில் 75 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் புதியவர்கள்.
ஒற்றை ரீல் இயக்கம் தயாரிக்கும் வருங்காலத் தயாரிப்புகளிலும் புதியவர்களின் வருகை அதிகமாக இருக்கும். இவ்வியக்கம் தயாரிக்கும் முதல் ஆறு படங்களை படைப்பாளர் ஞானி உருவாக்குகிறார். பின்னர் புதிய திறமையாளர்களிடமிருந்து திரைக்கதைகள் பெறப்பெட்டு, தேர்வு செய்யப்பட்டு தயாரிக்கப்படும். தமிழில் தொடங்கப்பட்டிருக்கும் ஒற்றை ரீல் இயக்கும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என்று பிறமொழிகளுக்கு வருங்காலத்தில் விரிவுபெறும்.
Thursday, December 20, 2007
ஒற்றை ரீல் இயக்கம்! - புதுமையான திரைப்பட வளர்ச்சி!!
Posted by PYRAMID SAIMIRA at 12/20/2007 12:44:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
Good try. I am verymuch happy about Corporate companies also involved with Parallel Cinema. Hats off to Pyramid Saimira.
நிச்சயம் இளைய தலைமுறைக் கலைஞர்களுக்கு புத்துணர்வளிக்கும்..புதுமையான முயற்சி.. வாழ்த்துக்கள் சாய்மீரா..
அருமையான முயற்சி. இந்த படங்களை இயக்குபவர்களை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்க போகிறார்கள்?
மிகச்சிறப்பான முயற்சி. தொடர வாழ்த்துக்கள்.
Congrats to Gnani and Swaminathan!
im really proved of this i think the frist time in the world every one can direct someone good.........congratulation
exellent.a new gate opens for talented guys.it is a great idea.different thought.thanks to pyramid saimira and ghanabanu..
m.p. mathivanan
mexcellent.a new gate opens for the tallented guys.it is a great idea different thought. thanks to pyramid saimira and ghanabanu.
m.p.mathivanan
Good try, How i am participate in this movement.
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
வணக்கம் சார். திறமைய காட்ட பலப்படைப்பாளிகளுக்கு நல்ல வழி. தொடர்ந்து சாய்மீரா பல நல்ல விஷயங்களை அறிமுகப்படுத்தி தமிழ் திரைப்படத்துறைக்கு புத்துணர்வை அளித்து வருகிறது. எங்களை போல உதவி இயக்குனர்களுக்கு மிக பெரிய நம்பிக்கை வர இது போன்ற நிறைய முயற்சிகளை தொடரந்து எதிர்ப்பார்க்கிறோம்.. வாழ்த்துக்கள்.. போட்டியில் பங்கு பெற ஆவலோடு காத்திருக்கிறோம் அன்புடன்
வீரமணி
நல்ல முயற்சி!!!
I am very much happy with this announcement. This kind of effort is only possible by the Corporate Companies like Saimira.Hats off Mr.Gnani for his valuable thought, that will bring good technicians to the worldcinema. Thaks a lot
வணக்கம் சார்,
நிச்சயம் இளைய தலைமுறைக் கலைஞர்களுக்கு புத்துணர்வளிக்கும்..புதுமையான முயற்சி.. வாழ்த்துக்கள் சாய்மீரா..
அருமையான முயற்சி. இந்த படங்களை இயக்குபவர்களை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்க போகிறார்கள்?.நம்பிக்கை வர இது போன்ற நிறைய முயற்சிகளை தொடரந்து எதிர்ப்பார்க்கிறோம்.. வாழ்த்துக்கள்.. போட்டியில் பங்கு பெற ஆவலோடு காத்திருக்கிறோம் அன்புடன்
நிச்சயம் இளைய தலைமுறைக் கலைஞர்களுக்கு புத்துணர்வளிக்கும்..புதுமையான முயற்சி.. வாழ்த்துக்கள் சாய்மீரா..
Dear sir,
My name is M.V.Theivakani.
I am from sivakasi. I have got 5 short films that about Honour the national flag. Will you help me to promote my creations.
Thank u
what is ur contact no and address
I've 7 different stories & remarkable screenplays for otrai reel iyakkam.Please accept my truly imaginary scrypts & give me a chance to prove myself & how great the tamil cinema.Hearty congrats to Pyramid saimira.
I've 7 different stories & remarkable screenplays for otrai reel iyakkam.Please accept my truly imaginary scrypts & give me a chance to prove myself & how great the tamil cinema.Hearty congrats to Pyramid saimira.
நிச்சயம் இளைய தலைமுறைக் கலைஞர்களுக்கு புத்துணர்வளிக்கும்..புதுமையான முயற்சி.. வாழ்த்துக்கள் சாய்மீரா..
Vazhthukal Gowtham Sir