Saturday, December 22, 2007

மீண்டும் ரம்பா!



ரம்பாவை நினைவிருக்கிறதா? 'அழகிய லைலா'வாக தமிழ் திரையுலகில் வலம் வந்தவர். உழவன் படத்தில் சிறிய கேரக்டரில் அறிமுகமாகி, திவ்யபாரதியின் சாயலுடன் இருந்ததால் தெலுங்கில் இவருக்கு அடித்தது அதிர்ஷ்டம். மீண்டும் 'உள்ளத்தை அள்ளித்தா' படம் மூலமாக தமிழில் ரீ-என்ட்ரி அடித்து கவர்ச்சியாலும், கலக்கல் நடிப்பாலும் பெரிய ரவுண்டு வந்தார்.

ரம்பா சொந்தமாக தயாரித்த 'த்ரீ-ரோசஸ்' திரைப்படம் பெரிய வெற்றி பெறாததால் அவருக்கு வாய்ப்புகள் குறைந்து இந்தி பக்கம் ஒதுங்கினார். இந்தியில் மிதுன்சக்கரவர்த்தியின் ஜோடியாக சில படங்களில் நடித்தவர் போஜ்புரி மொழிக்கு சென்று கலக்கிக் கொண்டிருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழுக்கு வருகிறார். புதுமுக இயக்குனரான வீரா என்பவர் இயக்கும் படம் ஒன்றில் ஒப்பந்தமாகியிருக்கிறார். படத்தின் பெயர் 'மறுபடியும் சின்னவீடு!' - அப்படி போடுங்க அருவாளை!

0 comments: