Monday, December 17, 2007

பீமா - கேலரி!

'மஜா' படத்திற்கு பிறகு மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு விக்ரம் நடித்து வெளிவரும் திரைப்படம் பீமா. சாமி படத்தில் இவருக்கு இணையாக நடித்த த்ரிஷா இந்தப் படத்திலும் நடிக்கவிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. லிங்குசாமி இயக்கத்தில் வெளிவரும் இப்படத்துக்காக எடையை அதிகரித்திருக்கிறார் விக்ரம்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஏற்கனவே வைரமுத்து எழுதிய பாடல்கள் ஹிட் ஆகியிருக்கிறது. நியூசிலாந்தில் இரண்டு பாடல்காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது. ஏ.எம். ரத்னம் தயாரிப்பு என்றாலே பிரம்மாண்டத்துக்கு குறைவிருக்காது. படம் பொங்கலுக்கு திரையரங்குகளை ஆக்கிரமிக்கும் எனத் தெரிகிறது.














0 comments: