தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகர் சிரஞ்சீவி. தெலுங்கில் மெகாஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர். இவரது தந்தையார் கொனிதல வெங்கட்ராவ். ஆந்திராவில் காவல்துறையின் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
கடந்த இருமாதங்களாக இதயநோயால் அவதிப்பட்டு வந்த வெங்கட்ராவ் இன்று அதிகாலை மூன்று மணியளவில் ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் மரணமடைந்தார். நேரம் தவறாமைக்கும், கண்டிப்புக்கும் பெயர்போனவர் வெங்கட்ராவ். அவரது மரணம் ஆந்திராவில் பிரமுகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த இரு மாதங்களுக்கு முன்பு தன்னுடைய பேத்தி (சிரஞ்சீவியின் இரண்டாவது மகள்) திடீர் காதல் திருமணம் செய்துகொண்டது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
காலமான வெங்கட்ராவுக்கு அஞ்சனாதேவி என்ற மனைவியும் சிரஞ்சீவி, நாகேந்திரபாபு, பவன்கல்யாண் (மூவருமே நடிகர்கள்) ஆகிய மகன்களும் விஜயதுர்கா, மாதவி என்ற இருமகள்களும் உண்டு.
ஹைதராபாத்தில் இருக்கும் சிரஞ்சீவியின் இல்லத்துக்கு முன்பு ஏராளமான ரசிகர்களும், திரையுலக, அரசியல் பிரமுகர்களும் சோகத்துடன் குவிந்திருக்கிறார்கள்.
Monday, December 24, 2007
மெகாஸ்டார் சிரஞ்சீவியின் தந்தை மரணம்!
Posted by PYRAMID SAIMIRA at 12/24/2007 11:41:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
நான் இங்கே ஹைதராபாத்தில் தான் உட்கார்ந்திருக்கிறேன். தமிழ்மணம் பார்த்துதான் விஷயம் தெரியும். சிருவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
நான் இங்கே ஹைதராபாத்தில் தான் உட்கார்ந்திருக்கிறேன். தமிழ்மணம் பார்த்துதான் விஷயம் தெரியும். சிருவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.