விஜயகாந்தின் 100வது திரைப்படமான கேப்டன் பிரபாகரன் பிரும்மாண்ட வெற்றி பெற்ற திரைப்படம். அப்படத்தைப் போலவே தனது 150வது திரைப்படத்தையும் பிரும்மாண்ட வெற்றிப் படமாக உருவாக்க கேப்டன் இரவு பகலாக உழைத்து வருகிறார். கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மாதேஷ் இயக்கும் அரசாங்கம் கேப்டனின் 150வது திரைப்படம். 100வது படத்தின் போது கேப்டன் நடிகராக மட்டும் இருந்தார். இப்போது பிரபல அரசியல் கட்சியின் தலைவராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் இருப்பதால் படம் குறித்த எதிர்பார்ப்பு பலமடங்கு எகிறியிருக்கிறது.
கதாநாயகிகளாக புதுமுகங்கள் நவ்நீத்கவுர், செரில் ப்ரிண்டோ நடிக்கிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். ஏ.வெங்கடேஷ் கேமிராவை கையாளுகிறார். பிரபல எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் படத்துக்கு வசனம் எழுதுகிறார். கேப்டன் என்றாலே அதிரடிக்கு பெயர் போனவர். ஆனால் இப்படத்தின் ஸ்டில்களை பார்த்தால் ரொமான்ஸிலும் கலக்கியிருக்கிறார் என்று தெரிகிறது.
Saturday, December 15, 2007
கேப்டனின் 150வது திரைப்படம் "அரசாங்கம்"
Posted by PYRAMID SAIMIRA at 12/15/2007 04:10:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
ஏன் இப்படி