Wednesday, December 26, 2007

மீண்டும் மீனா!


பத்து ஆண்டுகளுக்கு முன்பாக ரஜினி, கமல் என்று எல்லா முன்னணி நாயகர்களோடும் நடித்து தமிழ்திரையுலகில் வெற்றிகரமான நடிகையாக வலம் வந்தவர் மீனா. சில ஆண்டுகளாக அவர் தமிழ் சினிமாக்களில் தலைகாட்டவில்லை. மலையாளம், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வந்தார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். கடைசியாக மீனா நடித்து தமிழில் வெளிவந்த திரைப்படம் கண்ணம்மா.

இரு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் களமிறங்குகிறார் மீனா. காமெடி நடிகர் செந்தில் கதாநாயகனாக நடிக்கும் 'ஆதிவாசியும், அதிசயப்பேசியும்' என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் மீனா. பயந்துவிடாதீர்கள், செந்திலுக்கு ஜோடியாக அல்ல. இப்படத்தில் ரமேஷ் அரவிந்தும் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தான் மீனா நடிக்கப் போகிறாராம்.

0 comments: