சினிமா உருவான காலம் அது. திரையில் நகரும் உருவங்களை கண்ட மக்கள் பீதி அடைந்தார்கள். அது ஏதோ பில்லி, சூனியத்தின் வேலை என்று மத அடிப்படை வாதிகள் மக்களை அச்சுறுத்தி வைத்திருந்தார்கள். சினிமா தொழில் சார்ந்தவர்களை பில்லி, சூனியம் வைப்பவர்கள் என்று கருதி பழமைவாதிகள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை விட்டு துரத்தியடித்தார்கள்.
அப்படி துரத்தி அடிக்கப்பட்டவர்கள் தஞ்சம் அடைந்த பகுதி காடுகளும், மலைகளுமாக இருந்தது. கருப்பு வெள்ளை சினிமா காலத்தில் கடுமையான முயற்சிகளுக்குப் பின்னரே வரலாறு படைத்த ஸ்டுடியோக்கள் அங்கே ஆரம்பிக்கப்பட்டன. அன்றைய அந்த பொட்டல் காடு தான் இன்றைய ஹாலிவுட்.
சினிமாத் தொழில் இப்போது வெஸ்ட்சைட், பர்பேங்க் போன்ற நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வந்தாலும் கூட தொழில்நுட்ப பணிகள் இன்னமும் ஹாலிவுட்டிலேயே நடந்து வருகிறது. வரலாற்று புகழ்பெற்ற ஹாலிவுட் தியேட்டர்களுக்கு வந்து செல்வதை லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் பெருமையாக கருதுகின்றனர். அகாடமிக் விருதுகள் வழங்கும் விழா ஹாலிவுட்டிலேயே தொடர்ந்து பாரம்பரியமாக நடந்து வருகிறது.
Informative Post. Thanks
1. முதல் படம் கோடாக் தியேட்டர் மாடியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. இங்குதான் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெறும்.
2. கீழே நடைபாதையில் தெரியும் மஞ்சள் நட்சத்திகள்தான் புகழ்பெற்ற கலைஞர்களை சிறப்பிக்கும் வகையில் பதிக்கப்படும் walk of fame.
3. பர்பேங்க், சேட்ஸ்வொர்த் நகரங்களின் சிறப்பு 'வேறு' வகை படங்களில் உள்ளது.
informative post