இந்தியத் திரையுலகின் பிரம்மாண்டமான தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜி.பி.சிப்பி காலமானார். அரைநூற்றாண்டு காலமாக பாலிவுட்டை தன் கைவசம் வைத்திருந்த சிப்பிக்கு வயது 93. உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த அவர் இன்று காலமானார்.
பல வருடங்கள் திரையரங்குகளில் ஓடிய “ஷோலே” திரைப்படத்தை யாரும் மறந்துவிட முடியாது. அமிதாப் பச்சனுக்கு இந்தியில் நிலையான இடத்தை பெற்றுத் தந்த திரைப்படம் அது. அப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் இவர். கமல்ஹாசனை “சாகர்” என்ற திரைப்படம் மூலமாக இந்தியில் பிரபலமாக்கியவர் இவர்.
ஷோலே, பிரம்மச்சாரி, சீதா அவுர் கீதா, அந்தாஸ், சாஸ், மேரே சனம், பந்தன், த்ரிஷ்னா,ஈஸாஸ், ஷான், சாகர், ராஜூ பங்கயா ஜெண்டில்மேன், ஹமேஷா உள்ளிட்ட பதினேழு படங்களை தயாரித்தும் மெரைன் ட்ரைவ், சந்திரகாந்தா, ஸ்ரீமதி420, அதில் இ ஜஹாங்கீர், லைட் ஹவுஸ், பாய் பேஹன் போன்ற படங்களை இயக்கியும் இருக்கிறார்.
இதுமட்டுமல்லாமல் சினிமா மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவராக பல வருடங்கள் இருந்தவர் சிப்பி. 1968 மற்றும் 1982ஆம் ஆண்டுகளில் பிலிம்பேர் விருதும் பெற்றிருக்கிறார். பல பேருக்கு முகவரி தந்த பழம்பெரும் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் திடீரென்று காலமானதால் இந்தி படவுலகம் சோகத்தில் மூழ்கியிருக்கிறது.
Wednesday, December 26, 2007
பிரபல தயாரிப்பாளர் ஜி.பி.சிப்பி காலமானார்!
Posted by PYRAMID SAIMIRA at 12/26/2007 03:24:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment