தமிழ் திரையுலகில் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றவர் யாரென்று கேட்டால் உடனே 'ஆச்சி மனோரமா' என்று எல்லோருமே சொல்லுவார்கள். ஆயிரம் படங்களுக்கு மேல் நூற்றுக்கணக்கான வேடங்களில் நடித்த ஆச்சி நடிக்காத கதாபாத்திரங்களே இல்லையென்று சொல்லலாம். கதாநாயகியாக அறிமுகமாகி நகைச்சுவை வேடங்கள், குணச்சித்திர வேடங்கள் என்று கலந்துகட்டி அடித்தவர் ஆச்சி.
சில ஆண்டுகளுக்கு முன்பாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றபோது ஆச்சி சொன்னார். "எனக்கு நிறைவேறாத ஆசைகள் இரண்டு உண்டு. ஒன்று நடிகர் திலகத்தின் ஜோடியாக ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும். இன்னொன்று இதுவரை நான் ஏற்றிராத கதாபாத்திரமான அரவாணியாக ஒரு திரைப்படத்தில் நடிக்கவேண்டும்" அவரது முதல் ஆசை "ஞானப்பறவை" திரைப்படம் மூலமாக நிறைவேறியது. அடுத்த ஆசை இப்போது நிறைவேறப்போகிறது.
சோலைக்குயில், மலைச்சாரல், காதலே நிம்மதி போன்ற திரைப்படங்களை இயக்கிய இந்திரன் படுகர் இனத்தைச் சேர்ந்தவர். மலைவாழ் பழங்குடி மக்களின் பிரச்சினைகளை தன் படங்களில் லைட்டாக தொட்டுச் செல்வார். நீலகிரி மலைப்பகுதியில் வாழும் படுகர் இனத்தவர் குறித்து இவர் இயக்கப்போகும் புதிய படம் "ஜான்". இந்தத் திரைப்படத்தில் தான் ஆச்சி அரவாணியாக நடிக்க இருக்கிறார். இப்படம் ஆச்சியின் திரையுலகப்பாததயில் ஒரு மைல்கல்லாக அமையும் என்றார் இயக்குனர் இந்திரன்.
Wednesday, December 19, 2007
அரவாணி வேடத்தில் ஆச்சி!
Posted by PYRAMID SAIMIRA at 12/19/2007 03:30:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment