Tuesday, December 25, 2007

"என் சினிமா கனவுகள்!” - எழுத்தாளர் ஞாநி

ஒரு ரீல் என்பது ஆயிரம் அடி ஃபிலிம் சுருள். 11 நிமிடங்கள் ஓடக்கூடியது. நாம் காணும் வணிகப்படங்கள் பெரும்பாலும் 14 முதல் 16 ரீல்கள் நீளம் உடையவை. பத்து நிமிடங்களுக்குள் ஒரு கதையைச் சொல்வது; ஒரு நிமிடம் விளம்பரதாரர்களுக்கு என்ற அடிப்படையில் ஒற்றை ரீல் படங்களை உருவாக்கி, திரையரங்குகளில் பிரதானப் படத்துக்கு முன்பாக இலவசமாக பார்வையாளர்களுக்கு வழங்கலாம் என்று திட்டம் தீட்டினேன். கடந்த நான்கு ஆண்டுகளில் இது தொடர்பாக, சில தயாரிப்பாளர்களிடமும், விநியோகஸ்தர்களிடமும், அரங்க உரிமையாளர்களிடமும் பேசினேன். பொதுவாக திட்டம் உற்சாகமாக வரவேற்கப்பட்டது என்றாலும் யார் முதல் மணியைக் கட்டுவது என்ற தயக்கம் இருந்தது.

தங்கள் வசம் சுமார் 200 தியேட்டர்களை வைத்திருக்கும் கார்ப்பரேட் கம்பெனியாகன பிரமிட் சாய்மீராவும் எங்கள் ஞானபானுவும் இணைந்து பதினைந்தே நாட்களில் முதல் படம் தயாராகி, சென்சார் கூட முடித்துவிட்டோம். ‘யு' வித்தவுட் கட்ஸ். படத்தில் பல பரிசோதனைகள். பத்து நிமிடங்களும் ஒரே ஷாட் என்று திட்டமிட்டோம். ஆனால், ஆயிரம் அடிச் சுருளை மாட்ட, கேமராவுக்கான மேகசின் இல்லை. எனவே, ஐந்து ஐந்து நிமிடங்களாக இரு ஷாட்களில் எடுத்தார் ஒளிப்பதிவாளர் பி.எஸ். தரன். இரண்டே பாத்திரங்கள். பத்து நிமிடங்களும் பேசிக்கொண்டே இருக்கும் கணவனாக நீல்சன். ஒரு வார்த்தையும் பேசாத மனைவி பாத்திரத்தில் ரோஹிணி. இந்த மூவரைத் தவிர மற்ற எல்லாருக்கும் - கதாசிரியர் திலீப்குமார், எடிட்டர் சிவமதி, இசையமைப்பாளர் அனில், இயக்குநராகிய நான் என எல்லாருக்கும் இது முதல் படம்.

புதிய கருத்துக்கள், புதிய அணுகுமுறை, புதியவர்களுக்கே அதிக வாய்ப்பு என்ற அடிப்படையில் தொடங்கியுள்ள ஒற்றை ரீல் இயக்கத்தின் முதல் படம் டிசம்பர் 28 அன்று தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் மக்களை சந்திக்க இருக்கிறது. சரியாக 112 வருடங்களுக்கு முன்னால், இதே தேதியில் தான் லூமியர் சகோதரர்கள் பாரிஸ் நகரின் ஓட்டல் மண்டபத்தில் மக்களுக்கு காட்டினார்கள். அது ஒரு ரீலைவிடச் சின்னது. மொத்தம் பத்து படங்கள். ஒவ்வொன்றும் சுமார் 40 செகண்டுகள் ஓடியவை.

(எழுத்தாளர் ஞாநி, ஆனந்த விகடன் டிசம்பர் 26, 2007 இதழில்)

4 comments:

  1. said...

    ஞானி அவர்களின் ஒவ்வொரு முயற்சியும் புதுமையாகவும் அதிநவினமாகவும் இருக்கிறது...வாழ்த்துக்கள் ஞானி சார் புதியவர்களை வரவேற்கும் முயற்சிக்கு நன்றி. திரைக்கதையை எப்படி போட்டிக்கு அனுப்ப வேண்டும் என்ற விபரங்களை தெரியப்படுத்தாலமே..

    எதிர்பார்ப்புடன்
    வீரமணி

  2. Anonymous said...

    it is very good thing why becouse many of our's are have more innovative ideas such me but they dont know how express them selfes so i thing it's avery good idea.

  3. Anonymous said...

    ஞாநி, மற்றும் கார்பரேட் புயலாய் சினிமாவில் உதித்திருக்கும் பிரமிட் சாய்மீரா நிறுவானத்திற்கும் என்னுடய வணக்கத்தையும் , வாழ்த்தையும், முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
    உங்களுடய முயற்சி வெற்றியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    எனக்கும் தோன்றும் சில எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

    நீங்கள் குறும்ப்டங்களை தயாரிப்பதற்கு பதிலாக, ஏற்கனவே நிறைய இளைஞர்கள் தங்கள் சொந்த பணத்தை போட்டு தங்கள் திறைமைகள் வெளியே தெரியாதா? என்ற ஏக்கத்துடன் செய்து வைத்த, பல படங்களை நான் என்னுடய நண்பர் ஓரு நடத்தும் இணையதளத்தில் பார்த்திருக்கிறேன்..

    நீங்கள் ஏன் அந்த படங்களை எடுத்து முழூவதும் டிஜிட்டல் சினிமாவை ஆதரிக்கும் உங்கள் நிறுவ்னம் மூலமாய் வெளியிட கூடாது?

    சமீபத்தில் நான் பார்த்த ஓரு குறும்படம் "ஆக்ஸிடெண்ட்" என்கிற மிக நன்றாகவும், வித்யாசமாகவும் இருந்த்து..

    http://www.shortfilmindia.com/ShortAccident.html

    this is to your reference only . its up to you people to post it in your blog.
    please consider and give life to all the dreaming creators.

    thanking you

  4. Anonymous said...

    *****சமீபத்தில் நான் பார்த்த ஓரு குறும்படம் "ஆக்ஸிடெண்ட்" என்கிற மிக நன்றாகவும், வித்யாசமாகவும் இருந்த்து..

    http://www.shortfilmindia.com/ShortAccident.html

    this is to your reference only . its up to you people to post it in your blog.
    please consider and give life to all the dreaming creators.
    ******

    This shortfilm's authenticity is questioned here. please take due care