Wednesday, December 26, 2007

சென்னையில் சுற்றுச்சூழல் குறித்த படவிழா!

சுற்றுச்சூழல் குறித்த நான்கு நாள் படவிழா ஒன்று நேற்று சென்னையில் தொடங்கியது. இவ்விழாவை சர்வதேச திரைப்பட அகாடமி, செவன்த் சேனல் கம்யூனிகேஷன் இணைந்து நடத்துகிறது. இந்த நான்கு நாட்களும் சென்னை பிலிம் சேம்பரில் சுற்றுப்புறச்சூழல் குறித்த அக்கறையை காட்டும் படங்கள் காட்டப்படும். Global Warming குறித்த விவாதங்கள் நடந்துவரும் சூழ்நிலையில் இவ்விழா முக்கியத்துவம் பெறுகிறது.

அமைதிக்கான நோபல் பரிசினை அல்கோருக்கு வழங்கிய படமான "AN INCONVENIENT TRUTH" இவ்விழாவில் திரையிடப்படுவது குறிப்பிடத்தக்கது. சுற்றுச்சூழல் அக்கறை குறித்த படங்கள் மட்டுமல்லாது விருதுகளை வென்ற திரைப்படங்களும் திரையிடப்படும். திரையிடப்படும் திரைப்படங்கள் குறித்த விவரங்களை இங்கே காணலாம். பிலிம்சேம்பரில் திரையிடப்படும் படங்களை பொதுமக்கள் இலவசமாக காணலாம்.


விழாவில் மாதவன், பிரமிட் சாய்மீரா குழும நிர்வாக இயக்குனர் சாமிநாதன் மற்றும் செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன்.



”சுற்றுச்சூழல் குறித்த இப்படங்களை பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் காணவேண்டும். சுற்றுச்சூழல் குறித்த அக்கறையின்மை நமக்கு இருக்குமேயானால், எதிர்காலத்தில் நாம் வாழப்போகும் வாழ்க்கைக்கு நாமே தடையாகிவிடுவோம்” என்று விழாவை தொடக்கிவைத்து பேசிய நடிகர் மாதவன் குறிப்பிட்டார்.

“திருவனந்தபுரம் போன்ற நகரங்களில் இதுபோன்ற சர்வதேச முயற்சிகள் நடக்கும்போது எட்டாயிரம் பேராவது படம் பார்க்கிறார்கள். அதுபோன்ற நிலை எல்லா நகரங்களிலும் வரவேண்டும். படவிழா என்பது சிந்தனையாளர்களுக்கும், திரையுலகத்தினருக்கும் மட்டுமே என்ற நிலை மாறி பொதுமக்களின் பங்கேற்பும் இதுபோன்ற விழாக்களில் அவசியம்” என்று விழாவில் கலந்துகொண்டவர்கள் பேசினார்கள்.

பிரமிட் சாய்மீரா குழும நிர்வாக இயக்குனர் சாமிநாதன், செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன், இயக்குனர் ஹரிஹரன், பின்னணிப் பாடகி சின்மயி, டாக்டர் ரூபிணி செல்வநாதன் உள்ளிட்டோர் விழாவில் கலந்துகொண்டனர்.

0 comments: