படுகர் இன மொழித் திரைப்படமான ஹோசமுங்காரு பற்றிய பதிவு இங்கே!
Monday, December 31, 2007
பிரமிட் சாய்மீரா குழுமத்தின் புத்தாண்டு “வாழ்த்துகள்!” - Exclusive Gallery!
'தம்பி' திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பின் மாதவன் இயக்குனர் சீமானின் இயக்கத்தில் நடிக்கும் படம். ‘ஆர்யா' படத்தில் ”ஜோடின்னா இப்படித்தான் இருக்கணும்” என்று ஊர்கண் பட்ட ஜோடியான மாதவன் - பாவனா மீண்டும் இணையும் படம் “வாழ்த்துகள்” (வாழ்த்துக்கள் அல்ல)
* அம்மா கிரியேஷன்ஸ் சிவா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரிக்கும் திரைப்படம்
* இசை : 'இளையஞானி' யுவன்ஷங்கர் ராஜா
* 'கூத்துப்பட்டறை'யின் நிறுவனர்களில் ஒருவரான நா.முத்துச்சாமி முதன்முதலாக இப்படம் மூலமாக திரையில் தோன்றுகிறார்.
* நீங்கள் சற்றும் எதிர்பாராத அரசியல் பிரபலங்கள் இப்படம் மூலமாக வெள்ளித்திரைக்கு வருகிறார்கள்.
* 'ட்ராட்ஸ்கி மருது' தெரியுமில்லையா? நவீன ஓவியர். இதுவரை ஓவியம் மூலமாக மக்களை சந்தித்தவர் ஒலி-ஒளி ஓவியம் மூலமாக மக்களுக்கு தன் முகத்தை முதன்முதலாக காட்டவருகிறார்.
* எம்.ஜி.ஆர் குடும்பத்தில் இருந்து இன்னொருவர் இப்படம் மூலமாக திரையுலகுக்கு வருகிறார். அவர் எம்.ஜி.ஆரின் மருமகள் மல்லிகா சுகுமாரன். இவர் முன்னணி நடிகர் பிருத்விராஜின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.
* தமிழரை வாழ்த்த தமிழர் திருநாளில் உலகெங்கும் பிரமிட் சாய்மீரா நிறுவனத்தால் “வாழ்த்துகள்” வழங்கப்படும்.
Posted by PYRAMID SAIMIRA at 12/31/2007 11:12:00 AM 0 comments
Saturday, December 29, 2007
ஒல்லி ஒல்லி இடுப்பு, ஒட்டியாணம் எதுக்கு? - த்ரிஷா பயோடேட்டா + Gallery!!
பாலக்காட்டில் பிறந்த த்ரிஷா இன்று பாரெங்கும் வாழும் மனிதர்களை பரவசப்பட வைக்கிறார். மல்கோவாவுக்கு பெயர் போன சேலம் தான் த்ரிஷாவின் பெயரை முதன்முதலில் கவனிக்க வைத்தது. 1999ல் அம்மணி மிஸ் சேலமாம். அதே ஆண்டு சிங்காரச் சென்னையும் அவரை “மிஸ் சென்னை” என்று ஒத்துக் கொண்டது. 2001ல் மிஸ் இண்டியா அமைப்பாளர்கள் “ரொம்ப சூப்பரா சிரிக்கிறாங்க” என்று கூறி "Miss India Beautiful Smile" பட்டம் கொடுத்தார்கள்.த்ரிஷா அருமையான பாலே டேன்ஸர். மீனைப்போல நீந்துவார். பள்ளி நாட்களில் வாலிபால் சாம்பியனாம். ”ஜூனியர் ஹார்லிக்ஸ்” விளம்பரத்தில் இளம் அம்மாவாக இவர் நடித்தபோது எல்லாக் குழந்தைகளும் ஹார்லிக்ஸை விரும்பிச் சாப்பிட்டது குறிப்பிடத்தக்கது. அக்காலக் கட்டத்தில் விஜய் டிவியின் யூகிசேதுவின் நையாண்டி தர்பார் நிகழ்ச்சியில் “எக்காலத்திலும் சினிமாவில் நுழைய மாட்டேன். மாடலிங் துறையில் தான் இருப்பேன்” என்று சபதம் செய்திருந்தார்.
”ஜோடி” படத்தில் சிம்ரனின் தோழியாக துண்டு வேடத்தில் நடித்தவர் அடுத்தடுத்து லேசா லேசா, மனசெல்லாம், அலை, மவுனம் பேசியதே, எனக்கு 20 உனக்கு 18 என்று டஜன் படங்களுக்கு மேல் ஒப்பந்தமானார். விக்ரமுடன் சாமி, விஜய்யுடன் கில்லி என்று மெகா சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் நடித்தவுடன் புகழின் உச்சிக்கே போனார். இதே உயரத்தை ஒரே நேரத்தில் தமிழிலும், தெலுங்கிலும் பெற்ற ஒரே நடிகை த்ரிஷாவாக தான் இருக்கும். தெலுங்கிலும் வர்ஷம், நூ ஒஸ்தானுண்டே நேனு ஒத்துண்டானா?, பவுர்ணமி, சைனிகுடு, ஆடவாரி மாட்டலுக்கு அர்த்தாலு வேறுலே என்று ஹிட் படங்கள்!
விக்ரமோடு பீமா, விஜய்யோடு குருவி என்று த்ரிஷாவின் வெற்றிநடை தொடர்ந்து உயர்ந்து கொண்டே தானிருக்கிறது.
இயற்பெயர் :
த்ரிஷா கிருஷ்ணன்
செல்லப் பெயர் :
ஹனி (தேனே உன்னை தேடி தேடி நான் அலைஞ்சேனே!)
பிறந்தநாள் :
04-05-1983 (இருபத்தி நாலு வயசாவுதா?)
உயரம் :
5 அடி 7.5 இன்ச் (அண்ணாந்து தான் பார்க்கணுமா?)
எடை :
55 கிலோ (55 கேஜி தாஜ்மஹால்)
சைஸ் :
34 - 26.5 - 37.5 :-)
கண்ணின் நிறம் :
லைட் ப்ரவுன் (கிறங்கடிக்குதே?)
பள்ளி :
சர்ச் பார்க் காண்வெண்ட் (You know?)
கல்லூரி :
எத்திராஜா (சின்னப் பொண்ணு இவ படிச்சது)
எதிர்காலத் திட்டம் :
எம்பி எம்பியாவது எம்பிஏ முடிக்கணும்
தொழில் :
விளம்பர மாடல், திரைப்பட நடிகை (அதான் எங்களுக்கும் தெரியுமே?)
இணையதளம் :
http://www.trisha-krishnan.com (லேட்டஸ்ட் போட்டோவெல்லாம் அப்டேட் பண்ணுறாங்க)
மின்னஞ்சல் :
trisha_krishnan@yahoo.com (காதல் கடிதம் அனுப்பிய ஒருவருக்கு பதில் மின்னஞ்சலில் செருப்பு அட்டாச்மெண்டாக வந்ததாம்)
பலம் :
யோசித்து முடிவெடுக்கும் தன்மை! (உங்களோட ஹிட் படங்களை பார்த்தாலே தெரியுது)
பலவீனம் :
சின்ன சின்ன விஷயத்துக்கும் ரொம்ப யோசிப்பது! (அதுதானே பலம்னு சொன்னீங்க?)
யாரோடு டேட்டிங் போக ஆசை? :
பில் க்ளிண்டன் (இது மோனிகா லெவின்ஸ்கிக்கு தெரியுமா?)
இரவு வேளைகளில் செய்ய விரும்புவது :
புத்தகம் படிப்பது, இணையத்தை மேய்வது, எப்போதாவது பார்ட்டிக்கு போவது (அட்ரா.. அட்ரா.. அட்ரா)
பயம் :
நெருங்கிய மனிதர்களை இழந்துவிடும்போது வருவது
அடிக்கடி வரும் கனவு :
இரவுவேளையில் தனியாக யாருமே இல்லாத சாலையில் நடந்து போகிறேன். வேகமாக சைக்கிளில் வரும் பையன் ஒருவன் என் கையை பிடித்து இழுக்கிறான் (பையன் அழகா இருக்கானா?)
பிடித்த உணவு :
சிக்கன் (த்ரிஷா சிக்குன்னு இருக்குற ரகசியம்?)
பிடித்த புத்தகம் :
சிக்கன் சூப் ஃபார் த ஃசோல் (இதுலயும் சிக்கனா?)
பிடித்த எழுத்தாளர் :
சிட்னி ஷெல்டன் / டேனியல் ஸ்டீல் (இவங்கள்லாம் யாரு?)
பிடித்த பத்திரிகை :
பெமினா / காஸ்மோபாலிட்டன் (குமுதம், விகடன்லாம் கூட படிப்பீங்களா?)
பிடித்த படம் :
தி இங்கிலிஷ் பேஷண்ட் / சைலன்ஸ் ஆப் த லேம்ப்ஸ் (ரெண்டும் நீங்க நடிச்ச படம் இல்லையே?)
பிடித்த திரை நட்சத்திரம் :
ஜூலியா ராபர்ட்ஸ் / மனிஷா கொய்ராலா (அது சரி!)
ரோல் மாடல் :
க்ளாடியா ஃஷிப்பர், ஐஸ்வர்யா ராய், மது சாப்ரே
Posted by PYRAMID SAIMIRA at 12/29/2007 03:00:00 PM 2 comments
Friday, December 28, 2007
”ஹோச முங்காரு”
”ஹோச முங்காரு” - சீனமொழியிலோ, அல்லது வேறு மொழியிலோ உங்களை திட்டுவதாக நினைத்து விடாதீர்கள். ”ஹோச முங்காரு” என்றால் படுகர் இனமொழியில் ”புதுவசந்தம்” என்று அர்த்தமாம். கோவை, திருப்பூர், பெங்களூர் பகுதிகளில் படுக இனத்துமக்கள் அதிகமாக வசித்து வருகிறார்கள். “ஹோச முங்காரு” என்ற பெயரில் படுகர் மொழியில் ஒரு திரைப்படம் தயாராகிக் கொண்டிருக்கிறது.
சில காலமாக படுகமொழியில் ஆவணப்படங்கள் நிறைய வந்துகொண்டிருக்கிறது. படுக இனமக்களின் பிரச்சினைகளை பேசும் விதமான முயற்சிகள் திரையில் எடுக்கப்பட்டு வருகிறது. கார்த்திக் கதாநாயகனாக நடித்த ‘சோலைக்குயில்' திரைப்படம் படுகர் இனமக்களை படம் பிடித்து காட்டியது. படுகர் இனம் குறித்து தமிழில் தயாராகும் படம் ஒன்றினை குறித்த நமது பழைய பதிவு இங்கே.
படுகர்களின் மொழி கிட்டத்தட்ட கன்னடம் போலிருக்கும். தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் இத்திரைப்படத்தை ஒரேநாளில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ”கற்க கசடற” திரைப்படத்தில் வில்லனாக நடித்த அமெரிக்கவாழ் இந்தியரான ஜாக்ராசே கதாநாயகனாக நடிக்கிறார்.
பார்த்திபன், சாமி போன்ற இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக இருந்த வெற்றிவேலன் இப்படத்தை இயக்குகிறார். வெற்றிவேலனும் படுகர் இனத்தைச் சார்ந்தவரே.
Posted by PYRAMID SAIMIRA at 12/28/2007 02:53:00 PM 1 comments