Wednesday, January 2, 2008

தமிழ் சினிமா மறுமலர்ச்சிக்கு பிரமிட் சாய்மீரா அதிரடி திட்டம்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் இந்தி, சைனீஸ், மலாய் ஆகிய உலக மொழிகளிலும் திரைப்படத் தயாரிப்பு, விநியோகம், திரையிடுதல் என்று சினிமாவின் சகல துறைகளிலும் கால்பதித்து இந்தியாவின் நெ.1 தியேட்டர் செயின் நெட்வொர்க் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது பிரமிட் சாய்மீரா தியேட்டர் லிமிடெட் நிறுவனம்.

திரையுலக மறுமலர்ச்சியே இந்நிறுவனத்தின் நோக்கம் என்ற நிலையில் கடந்த இரண்டாண்டுகளில் வெளியான பல திரைப்பட வெளியீடுகளின் பின்னணியில் பிரமிட் சாய்மீராவின் பங்கு நிறைய இருக்கிறது. வெளியீடு காணமுடியாமல் தவித்த பல சிறுதயாரிப்பாளர்களின் திரைப்படங்களுக்கு நிதியுதவி செய்திருக்கிறது இந்நிறுவனம். வியாபார ரீதியான தொடர்பு எங்களோடு இல்லாத தயாரிப்பாளர்களுக்கும் எந்த பாரபட்சமும் இல்லாமல் பிரமிட் சாய்மீரா நிறுவனம் உதவியிருக்கிறது.

இந்நிலையில் நீண்டகால திரையுலக அனுபவம், திட்டமிட்டு திரைப்படங்களை தயாரிக்கும் ஆற்றல் இருந்தும் கூட பொருளாதார சிக்கல்களால் திரைப்படத் தயாரிப்பை விட்டு விலகி நிற்கும் தயாரிப்பாளர்களுக்கு உதவிக்கரம் நீட்ட ஒரு திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. இத்திட்டம் மூலமாக 24 தயாரிப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் படம் எடுப்பதற்கான சகல உதவிகளையும் பிரமிட் சாய்மீரா நிறுவனம் செய்யும். இதற்கென பிரமிட் சாய்மீராவால் அமைக்கப்பட்டிருக்கும் குழு சில தகுதிகள் அடிப்படையில் தயாரிப்பாளர்களை தெரிவு செய்யும்.

குறைந்தபட்சம் ஐந்து தமிழ்படங்களையாவது தயாரித்திருத்தல், பத்து ஆண்டுகாலமாவது தமிழ் திரையுலக அனுபவம் போன்ற தகுதிகளை கருத்தில் கொண்டு இத்தயாரிப்பாளர் பட்டியல் தேர்ந்தெடுக்கப்படும். இத்திட்டத்தின் மூலமாக படங்களை தயாரிக்கப் போகும் தயாரிப்பாளர்கள் பட்டியல் இவ்வார இறுதியில் தயாராகிவிடும்.

வரும் தைத்திங்கள் முதல் நாள் முதல்கட்டமாக 12 திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் பொற்கரங்களால் முன்பணம் அளிக்க பிரமிட் சாய்மீரா நிறுவனம் முடிவெடுத்திருக்கிறது.

இத்திட்டத்தில் பயன்பெறும் தயாரிப்பாளர்களுக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதை தீர்த்து வைக்க திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தயாராக இருக்கிறது. திரையுலகில் நீண்டகால அனுபவம் கொண்ட தயாரிப்பாளர்களை ஒரே நேரத்தில் மீண்டும் படம் எடுக்க வைப்பதின் மூலமாக தமிழ் சினிமாவில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்று பிரமிட் சாய்மீரா நிறுவனம் முழுமையாக நம்புகிறது.

3 comments:

  1. said...

    இத்திட்டத்தின் மூலமாக மீண்டும் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் சங்கிலி முருகன் படமெடுக்க வருகிறார் என்பது உபரி செய்தி.

  2. said...

    Enakku periyaththirai anubavamillai.Natakangal thayarippavan naan.Enadhu sameebaththiya natakangal periyaththiraiyil vandhal kandippaga vetri perum.Yaravadhu thayarippalaro,directorkalo udhavuvaargala?(enadhu BHARATARATNA enra nataka scriptkku ILAKKIYACHINTHANAI 2005kkana sirandha script ena virudhu vazhangi irukkiradhu
    T.V.Radhakrishnan

  3. Anonymous said...

    திரைப்பட வளர்ச்சிக்கு பிரமிட் சாய்மீரா எடுக்கும் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்!