Friday, January 4, 2008

உலகின் முதல் பேசும் படம் - ஜாஸ் சிங்கர்!




1927ல் வெளியான ஜாஸ் சிங்கர் தான் முழுநீள முதல் பேசும்படம். இப்படம் வெளியான பின்பு மவுனப்படங்களுக்கு மக்கள் மத்தியில் மவுஸ் குறைந்ததால், அதையடுத்து தயாரிக்கப்பட்ட படங்கள் அனைத்தும் பேசும்படங்களாகவே தயாரிக்கப்பட்டது. வார்னர் பிரதர்ஸால் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் ஆறு சூப்பர்ஹிட் பாடல்களும் உண்டு.

ஒரு பிறவிக் கலைஞன் தன் திறமைகளை வெளிப்படுத்தி சமூகத்தில் தன்னை அடையாளம் காட்ட எவ்வளவு சிரமங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது என்பதை அருமையாக எடுத்துக்காட்டிய 89 நிமிட திரைப்படம் இது.

படம் 1927, அக்டோபர் 6ஆம் திகதி வெளியானபோது பெரும் பரபரப்பு ஹாலிவுட்டில் ஏற்பட்டது. முதல் காட்சியிலேயே இத்திரைப்படத்தை பார்த்துவிடவேண்டும் என்று அமெரிக்காவின் முக்கியஸ்தர்கள் விரும்பினார்களாம். அக்காலக்கட்டத்தில் பல திரையரங்குகளில் ஒலியை தரக்கூடிய ஸ்பீக்கர் வசதி இல்லாததால் மவுனப்படமாகவும் சில தியேட்டர்களில் இத்திரைப்படம் ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தின் ப்ரீமியர் காட்சியை காண வார்னர் தியேட்டர் முன்பு குவிந்த பிரமுகர்கள் கூட்டம்!


மொத்தமாக சுமார் 235 தியேட்டர்களின் காண்ட்ராக்ட் முறையில் மாற்றி, மாற்றி திரையிட்டு செம வசூலை அள்ளினார்களாம் வார்னர் பிரதர்ஸ். இன்றைக்கும் வார்னர் பிரதர்ஸின் அதிக வசூலை அள்ளிய திரைப்படங்களின் பட்டியலில் எப்போதுமே ஜாஸ் சிங்கர்ஸுக்கு இடமுண்டு. சென்ற ஆண்டு இத்திரைப்படத்தின் டிவிடியை வார்னர் பிரதர்ஸ் வெளியிட்டபோதும் ஆச்சரியப்படத்தக்க அளவில் டிவிடிக்கள் விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.

1 comments:

  1. Anonymous said...

    அந்த காலத்தில பிளாக் டிக்கெட் , ஒவர் உடுறது லாம் உண்டா பாஸ்!