Monday, January 21, 2008

அப்பாடா!! - தசாவதாரம் ரிலீஸ்!!







சென்ற தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட கமல்ஹாசனின் ‘தசாவதாரம்' பொங்கலுக்காவது வெளியாகுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்தனர். பொங்கலுக்கும் அல்வா கொடுத்த தசாவதாரம் வரும் தமிழ்ப்புத்தாண்டுக்கு வெளியாகும் என்று சொல்லப்பட்டது.

படத்துக்கான சண்டைக்காட்சிகள் மற்றும் ஒப்பனைக்கு ஹாலிவுட்டில் இருந்து கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு மிகத்தரமாக அமைக்கப்பட்டிருப்பதால் காலதாமதம் ஏற்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. 10 வேடங்களில் முதன்முறையாக கமல் நடித்திருப்பதும், படத்தின் கதை என்னவென்று இதுவரை யாராலும் ஊகிக்க முடியாமல் இருப்பதும் படத்தின் எதிர்ப்பார்ப்புகளை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

இதுவரை எந்த தமிழ்படமும் போடப்படாத அளவுக்கு பிரிண்டுகள் தசாவதாரம் திரைப்படத்துக்கு போடப்படுமென்று தெரிகிறது. இந்தியா முழுமைக்கும் 1200 பிரிண்டுகள் போடப்படுமாம். தென்னிந்தியாவில் மட்டும் சுமார் 650 பிரிண்டுகள் திரையிடப்படும் என்று சொல்கிறார்கள்.

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தமிழ்ப்புத்தாண்டுக்கு நான்கு நாட்கள் முன்பே தசாவதாரம் ஏப்.10, 2008 அன்று வெளியாகப் போகிறது.

1 comments:

  1. Anonymous said...

    புது கமல் ஸ்டில் எதாவது போடுங்க பாஸ்!