Saturday, January 5, 2008

”லோக்கு லோக்கு லோக்கலு!” பழனி - மெகா போட்டோ கேலரி!!


"லோக்கு லோக்கு லோக்கலு!" - உச்சரிக்கும்போதே Catchy ஆக இருக்கிறதல்லவா? இது ஒரு தமிழ்படத்தின் பாடல் என்பதை நீங்கள் நம்பிதான் ஆகவேண்டும். மசாலா தூவி வெற்றிப்படங்களாக எடுத்துத் தள்ளிய இயக்குனர் பேரரசுவின் அடுத்த படமான 'பழனி'யில் இடம்பெறும் பாடல் இது. இதுவரை தான் இயக்கிய படங்களில் பாடல்கள் எழுதிவந்த பேரரசு இந்தப் பாடல் மூலம் பின்னணி பாடகராகவும் அவதாரம் எடுக்கிறார். "டோலு டோலுதான்" புகழ் சுசித்ராவுடன் இணைந்து இப்பாடலை பாடியிருக்கிறார் பேரரசு.

கதாநாயகனாக பரத்தும், கதாநாயகியாக காஜல் அகர்வாலும் நடித்திருக்கும் இத்திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. பாசமிக்க சகோதரிக்கும், உணர்ச்சிகளின் குவியலான தம்பிக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டம் தான் படத்தின் கருவாம். குஷ்பு பரத்தின் அக்காவாக நடிக்கிறார். இயக்குனர் பி.வாசுவும் படத்தில் நடித்திருக்கிறார்.

இதுவரை நடித்த படங்களில் துரத்தி துரத்தி கதாநாயகிகளை காதலித்த பரத், இப்படத்தில் துரத்தி துரத்தி வில்லன்களை பெண்டு நிமிர்த்துகிறாராம். ஸ்ரீகாந்த் தேவா இசையில் படத்தின் பாடல்கள் சமீபத்தில் இசைத்தட்டுகளாக வெளிவந்தது. தனுஷ், எஸ்.ஜே. சூர்யா, கார்த்தி, பரத், குஷ்பூ, சத்யராஜ், அமீர், ஜீவா, சிபி ஆகியோர் இசைத்தட்டு வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார்கள்.

வழக்கமாக பேரரசு படங்களில் இடம்பெறும் வெற்றிப்படத்துக்குரிய எல்லா மசாலா அம்சங்களும் இந்தப் படத்திலும் உண்டு என்பதால் வெற்றி நிச்சயம் என்று பழனி படக்குழு உறுதியாக நம்புகிறது.





































0 comments: