என்டிடிவி நிறுவனத்தின் சிறந்த இந்தியர் விருது ஜனவரி 17 அன்று புதுடெல்லியில் வழங்கப்பட்டது. இவ்விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு "Best Entertainer of the year" என்ற விருது பிரதமர் கையால் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு சூப்பர்ஸ்டாரின் ”சிவாஜி” வெளியாகி இந்தியாவின் பட்டி, தொட்டியெங்கும் பரபரப்பாக பேசப்பட்டது நினைவிருக்கலாம்.
”பிரதமரின் கையால் விருது பெற்றது எனக்கு கவுரவத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஆண்டவன் எனக்கு நடிகன் என்ற கதாபாத்திரத்தை தந்திருக்கிறான். அரசியல்வாதி என்ற கதாபாத்திரத்தை அளித்திருந்தால் அதையும் ஏற்றுக் கொண்டிருப்பேன்” என்று விழாவில் பேசினார் ரஜினிகாந்த். இந்த விருதினை வாங்க தன் மனைவி லதாவுடன் புதுடெல்லிக்கு சென்றிருந்தார் ரஜினிகாந்த்.
சென்ற ஆண்டின் சிறந்த அரசியல் தலைவர் விருதினை பிரதமரும், சிறந்த இசையமைப்பாளர் விருதினை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும், சென்ற ஆண்டு திரைத்துறைக்கு அதிக பங்களித்தவர் என்ற சிறப்பு விருதினை ஷாருக் கானும், சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை விஸ்வநாதன் ஆனந்தும், சிறந்த தொழிலதிபருக்கான விருதினை முகேஷ் அம்பானியும் இதே விழாவில் பெற்றுக் கொண்டனர்.
Saturday, January 19, 2008
ரஜினிக்கு பிரதமர் விருது!
Posted by PYRAMID SAIMIRA at 1/19/2008 05:00:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment