Thursday, January 10, 2008

சீறிவருகிறார் சிம்பு! - 'காளை' கலர்புல் ஸ்டில்ஸ்!

கடந்த ஆண்டு சிம்பு நடித்து எந்த படமும் வெளிவராததால் சிம்பு ரசிகர்கள் வெறியோடு 'காளை'யை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இடையில் கெட்டவனும் நிறுத்தப்பட்டு விட்டது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை ‘திமிரு' தருண்கோபி திருப்திபடுத்துவாரா என்பது பொங்கலன்று தெரிந்துவிடும். ‘திமிரு' என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கியிருப்பதால் தருண்கோபியின் இரண்டாவது படமான காளை மீதும் எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

பாடல்கள் ஏற்கனவே பட்டிதொட்டியெங்கும் ஹிட் ஆகியிருப்பதால் மகிழ்ச்சியோடு இருக்கிறார்கள் காளை குழுவினர். ஏ.ஆர்.ரஹ்மானின் வாரிசாக அவரது சகோதரி மகன் ஜி.வி.பிரகாஷை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துவிட்டனர். ஜி.வி.பிரகாஷ் கடந்த ஆண்டு இசையமைத்த எல்லாப் படங்களின் பாடல்களுமே ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

வடிவேலு, லால், வேதிகா, சங்கீதா என்று நட்சத்திரப் பட்டாளத்தோடு மிரட்டும் கெட்டப்பில் கலக்கியிருக்கிறாராம் சிம்பு. ஆண்டனி எடிட்டிங், ஆர்.டி.ராஜசேகர் கேமிரா என்பதால் படத்தின் தொழில்நுட்பத் தரத்தைப் பற்றி சொல்லவேண்டியதேயில்லை. இவை எல்லாவற்றையும் விட ஒரே ஒரு பாடலில் கவர்ச்சியில் சுனாமியாக பொங்கியிருக்கும் நிலா பற்றிதான் எங்கும் ஒரே பேச்சு! வழக்கு, வம்புதும்பு என்று மீடியாக்களில் காளை பரபரப்பாக பேசப்பட்டது படத்துக்கு நல்ல விளம்பரமாகவே அமைந்திருக்கிறது. 'நிக் ஆர்ட்ஸ்' சக்கரவர்த்தி தெம்பாகவே இருக்கிறார்.


























0 comments: