Wednesday, January 9, 2008

ரகசியமானது காதல் (படங்களுடன்)




வண்ணத்திரை சண்டை, வில்லன், தாதா, துப்பாக்கி, அரிவாளென்று ரத்தமயமாக மாறிக்கிடக்க சின்னத்திரையோ காதல், பள்ளிக்கூடம், நடனம் என்று இளமை ததும்பிக் கொண்டிருக்கிறது. சின்னத்திரையை மேலும் இளமையாக்க வருகிறது பிரமிட் சாய்மீரா தயாரித்து வரும் இளமை சீரியலான ”ரகசியமானது காதல்”

புகழ், புகழின் காதலி, புகழின் காதலியாக இருந்து நண்பியாக மாறியவள் - இந்த மூன்று கதாபாத்திரங்களை சுற்றி இளமை சூறாவளியடிப்பது தான் கதை. புகழ் ஒரு வானொலி நிலையத்தில் ரேடியோ ஜாக்கியாக பணிபுரிகிறார். புகழின் காதலி ஒரு கல்லூரி மாணவி. மாமியார் கொடுமை, கதாநாயகிக்கு பிரச்சினைகள் என்ற வழக்கமான மூக்கு சிந்தும் ட்ரெண்டில் இல்லாமல் எல்லோரும் தங்கள் கல்லூரிக்காலத்தையும், முதல் காதலையும் எண்ணிப் பார்க்கும் வகையில் சின்னத்திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் பின்னிப் பிணைந்தது தான் “ரகசியமானது காதல்”. இதுவரை சினிமாவில் கூட நீங்கள் கண்டிராத இடங்களில் கண்ணுக்கு குளுமையளிக்கும் விதமாக படமாக்கப்பட்டு வருகிறது.

கங்கா யமுனா சரஸ்வதி போன்ற பிரபல சீரியல்களை இயக்கிய அஸ்வின் பாஸ்கர் இயக்கத்தில் கவுசிக், ஸ்வப்னா நடிக்கிறார்கள். பிப்ரவரி முதல்வாரத்திலிருந்து முன்னணி தொலைக்காட்சி ஒன்றில் “ரகசியமானது காதலை” பகிரங்கமாக நீங்களும் ரசிக்கலாம். உங்கள் முதல் காதலை நினைவுறுத்தும் உங்கள் இளமை ப்ளாஷ்பேக்குகளுக்கு நாங்கள் கேரண்டி!!!

0 comments: