Wednesday, January 23, 2008

சின்னத்திரையில் புயலாக சிம்ரன்!


சிம்ரன் அறிமுகமான ‘ஒன்ஸ் மோர்' திரைப்படத்தில் சிம்ரனை காட்டி மணிவண்ணன் ஒரு வசனம் சொல்லுவார். ”தமிழ்நாட்டை எத்தனையோ புயல்கள் தாக்கியிருக்கு. ஆனா இந்தப் புயல் பயங்கரமா மையம் கொண்டு தாக்கு தாக்குன்னு தாக்கப் போவுது பாருங்க!”

அந்த வசனம் தீர்க்கதரிசனம் ஆனது. சிம்ரன் புயல் பல ஆண்டுகளுக்கு தமிழ் திரையுலகில் மையம் கொண்டிருந்தது. மிகத்திறமையான நடிகை, அழகானவர் - ஸ்லிம்மானவர், அற்புதமாக நடனம் ஆடக்கூடியவர் என்று சிம்ரனுக்கு ஏகப்பட்ட ப்ளஸ் பாயிண்டுகள் இருந்தன. திருமணத்திற்கு பின்னர் திரையுலகை விட்டு சிலகாலம் ஒதுங்கியிருந்தவர் மீண்டும் புயலாக தமிழ்நாட்டுக்கு நுழைகிறார். இம்முறை சின்னத்திரையில்...

பிரமிட் சாய்மீரா புரொடக்ஷன்ஸ் லிமிடெட் தயாரிக்கும் ”சிம்ரன் திரை” என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சி மிக விரைவில் இரவு 8.30 முதல் 9 மணிவரை தினமும் உங்கள் இல்ல வரவேற்பரைக்கு ஜெயா டிவி மூலமாக ஒளிபரப்பாகும். தினத்தந்தியின் கன்னீத்தீவு போல உங்கள் பொறுமையை சோதிக்கும் பாடாவதி மெகாசீரியல்களிலிருந்து உங்களுக்கு விடுதலை தர இருக்கிறது இந்நிகழ்ச்சி. மாதம் ஒரு கதை என்ற அடிப்படையில் புதுமையான யுக்தியில் தயாரிக்கப்பட்டு வரும் நிகழ்ச்சி இது.

சுவாரஸ்யமும், வேகமும் நிறைந்த கதைகளை காட்சிகளாக்கி தரப் போகிறோம். முதல் மாத கதையாக எழுத்தாளர் சுஜாதா எழுதிய “வண்ணத்துப் பூச்சி வேட்டை” படமாக்கப்பட்டு வருகிறது. பிரபல நடிகையும், இயக்குனருமான ஸ்ரீப்ரியா ‘சிம்ரன் திரையை' இயக்குகிறார்.

1 comments:

  1. said...

    ரெண்டு கொஸ்டீன் கேட்ட அனானிமஸ். வம்புலே மாட்டி விட்டுடாதீங்க!

    முதல் கேள்வி கூட ஓக்கே. ரெண்டாவது கேள்வி யப்பா...