Thursday, January 10, 2008

நயன்தாராவின் டூபீஸ் பிகினி விற்பனைக்கு - வாங்கத் தயாரா?


பில்லா படம் பரபரப்பாக தமிழகம் மட்டுமல்லாமல் உலகெங்கும் ஓடி வருகிறது. படத்தில் அஜித்தின் ஸ்டைல், விஷ்ணுவர்த்தனின் நேர்த்தி, நீரவ்ஷாவின் கேமிரா, யுவன்சங்கரின் இசை என்று ஒவ்வொன்றும் சிறப்பாக அமைந்திருந்தது. இவற்றுக்கெல்லாம் மேலாக பேசப்படுவது நயன்தாராவின் அதிரடி கவர்ச்சி. ஜேம்ஸ் பாண்டு பட ஹீரோயின்களை விட அழகாக, கவர்ச்சியாக இருந்தார் நயன்தாரா என்று அவரது ரசிகர்கள் மாய்ந்து மாய்ந்து பேசிக்கொள்கிறார்கள். படத்தில் கவர்ச்சிப்புயல் நமீதா இருந்தும் கூட நயன்தாரா ஒரு காட்சியில் அதிரடியாக எல்லாரையும் கவர்ந்திருந்தார்.

நீச்சல் குளத்தில் அஜீத் ஓய்வெடுப்பார். அப்போது அவருடன் அவரது காதலியான நமீதாவும் நீந்திக் கொண்டிருப்பார். கவர்ச்சியான டூபீஸ் உடையில் ஹாலிவுட் பாணியில் நயன்தாரா ஒயிலாக திடீரென்று நீச்சல்குளம் நோக்கி நடந்து வருவார். இந்த காட்சிக்கு விசில் அடிக்கத் தெரியாதவர்களெல்லாம் கூட திரையரங்குகளில் தங்களை மறந்து வயது வித்தியாசமில்லாமல் விசிலடித்தார்கள். ஒரு பிரபலமான ஹீரோவின் அறிமுகக் காட்சிக்கு கிடைக்கும் வரவேற்பு இந்த காட்சியில் நயன்தாராவுக்கு கிடைத்திருந்தது. நயன்தாரா 'டூபீஸ் பிகினி' உடையில் திரையில் தோன்றியது இதுவே முதன்முறை.

ஹாலிவுட்டில் படப்பிடிப்பு முடிந்ததுமே படத்தில் நடித்த நட்சத்திரங்களின் உடை, கூலிங் கிளாஸ், பயன்படுத்திய பொருட்கள் போன்றவற்றை ஏலம் விடுவது வழக்கம். அதுபோலவே பில்லா படத்தில் நயன்தாரா அணிந்த பிகினியும் ஏலம் விடப்படப்போவதாக ஒரு வதந்தி வேகமாக பரவிவருகிறது. இதைக் கேள்விப்பட்டதுமே தென்னிந்தியா முழுக்க இருக்கும் நயன்தாரா ரசிகர்கள் அந்த பிகினியை ஏலம் எடுக்க ஆவலோடு காத்திருக்கிறார்கள். இவர்களது ஆவலை பார்க்கும்போது ஏலத்தொகை பல லட்சங்களுக்கு எகிறும் என்று தெரிகிறது.

ஒரு முறை படப்பிடிப்பில் சிலுக்கு சுமிதா ஒரு கடி கடித்து போட்ட ஆப்பிள் பல்லாயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது நினைவிருக்கலாம்.

3 comments:

  1. Anonymous said...

    என்ன கொடுமையிது....?

  2. Anonymous said...

    சுமாரா என்ன ரேட் வரும் பாஸ் ?

  3. said...

    :))