Monday, January 7, 2008

சூப்பர்ஸ்டாருடன் இசைஞானி! - அபூர்வப் படம்!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இசைஞானி இளையராஜா இருவரும் சமகாலத்தில் திரையுலகில் நுழைந்து இமயம் போல சாதனை படைத்தவர்கள். கிட்டத்தட்ட 30 ஆண்டுகால திரையுலக வாழ்க்கைக்கு பிறகு இருவரும் தமிழ் திரையுலகில் யாரும் எட்டமுடியாத இடத்துக்கு வளர்ந்திருப்பவர்கள். நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் அருகருகே அமர்ந்து தங்கள் உயரங்களை மறந்து மகிழ்ச்சியாக அளவளாவிக் கொண்டிருந்தபோது எடுத்தப் படம். இசைஞானி கவலைகளை மறந்து வாய்விட்டு சிரிக்கிறார். சூப்பர் ஸ்டாரோ தன் இமேஜை மறந்து சாதாரண ரசிகர் போல விசிலடித்து மகிழ்கிறார்.

8 comments:

  1. Anonymous said...

    இது எந்த விழா என்று சொல்லமுடியுமா?

  2. கானா பிரபா said...

    இது திருவாசக அரங்கேற்றப் படம்.
    அபூர்வப் படமா? ம்க்கும் கூகிளானிடம் கேட்டால் கொடுப்பார்.

  3. Unknown said...

    சூப்பரின் தலைமுடி அளவை வைத்து பார்த்தால், எப்படியும் ஐந்து வருடங்களுக்கு முன்பு எடுத்த படமாக இருக்கலாம்....

  4. Anonymous said...

    விசிலடியால் வளர்ந்தவர்கள். ஒரு தடவை விசிலடிச்சா என்ன?

  5. Anonymous said...

    THIS PHOTO CLICKED @
    ILAIYARAAJA'S DIVINE COMPOSITION OF "THIRUVASAGAM" AUDIO RELEASE FUNCTION.

    VAIKO DELIVERED EXCELLENT SPEECH & ALL R ENJOYED HIS TAMIL ILAKKIA TALK.

  6. Thanjavurkaran said...

    இளையராஜாவின் திருவாசகம் ஒளிஇழை வெளியீட்டு விழாவில் எடுத்தது. வைகோ பேச்சைத்தான் இப்படி ரசிக்கிறார்கள் இருவரும்

  7. வந்தியத்தேவன் said...

    திருவாசகம் வெளியீட்டுவிழாவில் வைகோவின் பேச்சுக்கு சூப்பர் ஸ்ரார் விசிலடித்து மகிழ்கின்ற படம் இது

  8. கோபிநாத் said...

    அனானி...திருவாசகம் இசை வெளியிட்டு விழா அது...;))

    வை.கோ அவர்களின் பேச்சை ரசித்து ரஜினி விசில் அடித்தார் ;))