Friday, January 4, 2008

மார்ச் மாசம் ஸ்ரேயாவுக்கு டும்.. டும்.. டும்!!

ஸ்ரேயாவுக்கும் பட அதிபர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இவர்களது திருமணம் வரும் மார்ச் மாதம் 9ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.



திமிரு, வெயில், பள்ளிக்கூடம் போன்ற படங்களில் நடித்தவர் ஸ்ரேயா ரேட்டி. எஸ்.எஸ். மியூசிக்கில் வீடியோ ஜாக்கியாக இருந்து திரைப்பட நடிகையாக பரிணமித்தவர். திமிரு படத்தில் வில்லியாக ‘என்னை கல்யாணம் பண்ணிக்கோடா மாமா' என்று விஷாலை விரட்டி விரட்டி அடித்தவர் உண்மையிலேயே திருமணம் செய்து கொள்ளப் போகிறார். யாரை தெரியுமா? விஷாலின் சொந்த அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை.

விக்ரம் கிருஷ்ணாவும் ஒரு நடிகர் தான். நடிகர் திலகத்துடன் இணைந்து 'பூப்பறிக்க வருகிறோம்' என்ற திரைப்படத்தில் ‘அஜய்' என்ற பெயரில் கதாநாயகனாக அறிமுகமானவர். பிரபல தயாரிப்பாளர் ஜி.கே. ரெட்டியின் மகன் இவர். 'சண்டக்கோழி', ‘திமிரு' படங்களை இவர் தான் தயாரித்தார். ‘திமிரு' படத்தில் ஸ்ரேயா ரெட்டி நடிக்கும்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு மார்ச் 9 ஆம் தேதி பார்க் ஷெரட்டானில் திருமணம் நடைபெறப் போவதாக அறிவிக்கப் பட்டிருக்கிறது.

1 comments:

  1. said...

    தலைப்பில் சதி இருப்பது செய்தியை படித்தவுடன் தான் தெரிகிறது.

    அப்பாடா....நிறைய பேர் பெருமூச்சு விடுறாங்க...
    :)