இளைய தளபதி விஜய் இப்போது தரணி இயக்கத்தில் ‘குருவி' படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். குருவிக்குப் பிறகு ஏ.வி.எம். நிறுவனம் தயாரிக்கும் பிரம்மாண்டத் திரைப்படத்தில் பணியாற்ற சம்மதித்திருக்கிறார்.
ஏ.வி.எம். நிறுவனம் தனது 60வது ஆண்டுவிழாவையும், நிறுவனம் திரு. ஏ.வி.மெய்யப்பன் அவர்களின் நூற்றாண்டு விழாவினையும் கொண்டாடி வருகிறது. தொடக்கமாக சென்ற ஆண்டு ‘சிவாஜி' திரைப்படத்தை வெளியிட்டது. கொண்டாட்டத்தின் தொடர்ச்சியாக இந்த ஆண்டு இளையதளபதி விஜய்யை வைத்து மிக பிரம்மாண்டமான முறையில் ஒரு திரைப்படத்தை தயாரித்து வெளியிட திட்டமிட்டிருக்கிறது.
விஜய்க்கு திரைக்கு வந்த பதினேழு ஆண்டுகளில் பிரபல திரைப்பட நிறுவனமான ஏவிஎம்மோடு இணைவது இதுவே முதன்முறை. இத்திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களும் விஜய்யோடு இணைந்து நடிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இயக்குனர், இசையமைப்பாளர்கள் மற்றும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. எம்.பாலசுப்ரமணியன் மற்றும் பி.குருநாத் மெய்யப்பன் ஆகியோர் ஏவிஎம் சார்பாக இத்திரைப்படத்தை தயாரிக்கிறார்கள்.
Saturday, January 19, 2008
ஏ.வி.எம். படத்தில் விஜய்!
Posted by PYRAMID SAIMIRA at 1/19/2008 02:17:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
பெரிய கொடுமை என்னானா, நாறப்பய விஜய் கையால கமல் அவார்ட் வாங்கினது...இது எப்படி இருக்கு. காலத்தின் கொடுமையுங்கறது இதுதானா.