Saturday, January 19, 2008

இந்திய திரைப்பட சம்மேளனம் - பொன்விழா!

இந்திய திரைப்பட சம்மேளனம் அதிகாரப்பூர்வமாக தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம். இந்நிறுவனத்தில் 50வது வருட பொன்விழா நிகழ்ச்சிகள் மும்பை மாநகரில் ஜனவரி 19ஆம் நாள் ரங் சாரதா ஆடிட்டோரியத்தில் நடைபெற இருக்கிறது. இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் மாண்புமிகு. பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி முன்னிலை வகிக்கிறார். சிறப்புமிக்க இந்நிகழ்ச்சியினை வழங்குவதில் (Sponsor) பிரமிட் சாய்மீரா குழுமம் பெருமையடைகிறது.

இதுகுறித்து பிரமிட் சாய்மீரா குழுமத்தின் நிர்வாக இயக்குனர் திரு பி.எஸ்.சாமிநாதன் கூறியதாவது :

“உலகில் அதிவேகமாக வளர்ந்துவரும் பொழுதுபோக்கு நிறுவனமாகிய பிரமிட் சாய்மீரா குழுமம் நாட்டின் பொழுதுபோக்குக்காக பாடுபட்டு வரும் திரைப்பட சம்மேளனத்துக்காக ஒருங்கிணைந்து நிகழ்ச்சியை நடத்துவதில் பெருமையடைகிறது. கருப்புப் பணம் மற்றும் முறையற்ற பண பரிமாற்றம் போன்றவற்றிலிருந்து திரைத்தொழில் வெளிவந்து கொண்டிருக்கும் காலக்கட்டம் இது. உலகளாவிய லட்சியங்களை நோக்கி திரைத்துறையின் கட்டமைப்புகளை வலுவாக்கினால் உலகளவில் ஹாலிவுட்டுக்கு அடுத்த இடத்தை இந்திய திரைப்படத்துறை கைப்பற்றக்கூடிய சாத்தியக்கூறுகள் வலுவாகியிருக்கிறது.

இந்தியத் திரைத்துறை வளர்ச்சிக்காக அயராது பாடுபட்டு வரும் இந்திய திரைப்பட சம்மேளனத்துக்கு இவ்வேளையில் நன்றிகூற திரைத்துறையினர் எல்லோருமே கடமைப்பட்டிருக்கிறோம்”

இந்த பொன்விழா நிகழ்ச்சியில் ஒரு கலாச்சார நிகழ்ச்சியினை திரைப்பட சம்மேளனம் நடத்துகிறது. ஹிருத்திக் ரோஷன், அனில்கபூர், ராஜ்பாப்பர், ஜானிலீவர், ஆஷாபரேக் போன்ற கலைஞர்களும் மற்றும் பலரும் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் 60களின் மும்பை பிரதிபலிக்கப்படும். அந்நகரில் வாழும் பல்வேறு மொழி மற்றும் கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டு இந்நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்தியத் திரைப்படங்களில் இசைக்கான முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையிலான நிகழ்ச்சியும் உண்டு.

0 comments: