சினிமாவில் வெற்றி பெறுவதை விட, பெற்ற வெற்றியை தக்க வைத்துக் கொள்வதற்கே அதிகம் உழைக்க வேண்டியதிருக்கும். பில்லாவின் பிரம்மாண்ட வெற்றியை தக்கவைத்துக் கொள்ள அஜித்குமார் போராடி வருகிறார். பில்லாவை விட பெரிய வெற்றியை அடுத்துத்தர ஊண் உறக்கமில்லாமல் உழைத்து வருகிறார்.
இப்போது ராஜுசுந்தரத்தின் இயக்கத்தில் அஜித் வித்தியாசமான வேடத்தில் நடித்து வருகிறார். அக்பர் என்று முன்பு இப்படத்துக்கு தலைப்பு சொல்லப்பட்டு வந்தது. இப்போது அந்த தலைப்பை நீக்கியிருக்கிறார்கள். இன்னமும் புதுத்தலைப்பு வைக்கப்படவில்லை. ரஜினியோடு சிவாஜி, விஜய்யோடு அழகிய தமிழ்மகன் என்று வெற்றி ஏணியில் ஏறிக்கொண்டேயிருக்கும் ஸ்ரேயா அஜித்தோடு இந்தப் படத்தில் இணைகிறார்.
ஜெர்க்கின், மங்கி கேப், நீண்டதாடி, கூலிங் க்ளாஸ் என்று ஹாலிவுட் லெவல் கெட்டப்புக்கு அஜித் இந்தப் படத்துக்கு மாறியிருக்கிறார். ஹாங்காங்கில் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதிரடிப் படம் என்பதால் பில்லாவை விட சிறப்பாக சண்டைக்காட்சிகள் அமைய ஜாக்கிசானுடன் ஹாலிவுட் படங்களில் பணிபுரிந்த 'ஸ்டண்ட்' சிவாவை சண்டைப்பயிற்சிக்கு நியமித்திருக்கிறார்கள். படத்தின் கதை மற்ற விவரங்கள் பொத்தி பொத்தி பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அனேகமாக இத்திரைப்படம் ஏப்ரல் 14க்கு திரைக்கு வரலாம் என்கிறார்கள்.
Friday, January 25, 2008
ஹாங்காங்கில் அஜித்!
Posted by PYRAMID SAIMIRA at 1/25/2008 12:04:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
எனக்கெனமோ, இந்தபடம் ஊத்திக்கும்ணுதான் தோணுது.
ஸ்டில்ஸ் எல்லாம் பார்க்கும் போது அப்படித்தான் தோணுது.
எப்படி நந்தா ரூம் போட்டு யோசிப்பீங்களா ! எதையுமே பாக்காம பேசக்கூடாது.
விழுந்தாலும் எழுந்தாலும் அஜித்தை அடிச்சுக்க ஆள் இல்ல.
அட்வான்ஸ் வாழ்த்துக்கள் அஜித்.