Thursday, January 24, 2008

ஏ.வி.எம். + விஜய் + பேரரசு ?????


குருவி திரைப்படத்துக்குப் பிறகு ஏ.வி.எம். நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்க விஜய் சம்மதித்திருக்கிறார் என்பது தெரிந்ததே. படத்தின் இயக்குனர் உட்பட யாருமே இன்னமும் முடிவாகவில்லை.

இந்நிலையில் இயக்குனர் பேரரசு இயக்கியிருக்கும் ‘பழனி' திரைப்படத்தை விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பார்த்து பிரமித்திருக்கிறார். பழனியில் கமர்ஷியல் பஞ்சாமிர்தத்தை கடைந்தெடுத்திருந்தார் பேரரசு. மிக மென்மையாக நடித்துக் கொண்டிருந்த பரத்தை ஸ்டைலான ஆக்ஷன் + செண்டிமெண்ட் ஹீரோவாக பேரரசு மாற்றியிருந்தது அவரை மிகவும் கவர்ந்திருக்கிறது. ஏ.வி.எம். நிறுவனத்தையும் ‘பழனி' திருப்திபடுத்தியிருக்கிறதாம்.எனவே ஏ.வி.எம். நிறுவனத்துக்காக விஜய் நடிக்கப் போகும் படத்தினை பேரரசு இயக்கலாம் என்றொரு தகவல் உலாவருகிறது.

பேரரசு ஏற்கனவே தன் அடுத்தப் படத்துக்கான டைட்டிலை முடிவு செய்துவிட்டார். ஜேம்ஸ் பாண்டு படங்களில் அடுத்த படத்துக்கான டைட்டிலையும் அறிவித்து விடுவார்கள். அதே பாணியில் “திருத்தணி” என்ற டைட்டிலுக்கு பழனி படத்தில் பேரரசு தோன்றும் காட்சிகளிலேயே அசத்தல் இண்ட்ரோ கொடுத்திருக்கிறார். அதன் பின்னர் சில பேட்டிகளிலும் ‘திருத்தணி' என்ற பெயரில் படம் இயக்கப் போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே திருப்பாச்சி, சிவகாசி என்று சூப்பர் ஹிட் மசலா படங்களை விஜய்க்காக பேரரசு இயக்கியிருக்கிறார் என்பதும், ஏவிஎம் அஜித் காம்பினேஷனுக்கு 'திருப்பதி' வெற்றிப்படத்தை இயக்கிக் கொடுத்திருக்கிறார் என்பதும் அவருக்கு கூடுதல் பலம்.

இதற்கிடையே சமீபத்தில் அதிரடி வெற்றிபெற்ற ‘வேல்' படத்தை இயக்கிய இயக்குனர் ஹரிக்கும் வாய்ப்பிருக்கிறதாம். கமர்சியல் படங்கள் இயக்குவதில் கில்லியான ஹரி இதுவரை விஜய்யை இயக்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

5 comments:

  1. said...

    எம்மான் பேரரசு வாழ்க வாழ்க.. இயக்குனர் அரி வாழ்க வாழ்க வாழ்க..
    படம் பார்க்கும் புண்ணியர்கள் எக்கேடோ கெடுக..
    கமர்சியல் பஞ்சாமிர்தம் அடுத்த வெர்சன் ரெடி.
    கமர்சியல் பழைய சோறு
    கமர்சியல் சுண்டக்கஞ்சி எல்லாம் இவர்கள் போடத்தான் போகிறார்கள்.

  2. said...

    hi i heared sujatha stories r goin to come in jeya tv ,directed by sripriyan under ur company production.can u pls tel me when l it start and wat time ,which months

    advance wishes

  3. said...

    //hi i heared sujatha stories r goin to come in jeya tv ,directed by sripriyan under ur company production.can u pls tel me when l it start and wat time ,which months//

    பிப்ரவரி மாத ஆரம்பத்தில் வரலாம் கார்த்திக் பிரபு.

  4. said...

    நடுநிலையோடு எனது (தமிழ்நெஞ்சம்) கம்மென்ட் ஐ போஸ்ட் செய்ததற்கு நன்றி..

    பழனி படம் உங்கள் பிரமிட் சாய்மீரா வெளியீடு எனப் பிறகுதான் தெரிந்து கொண்டேன்.

    இருப்பினும் உங்கள் சகிப்புத்தன்மை என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. தொடர்க உங்கள் பணி. வாழ்க வளமுடன்

  5. said...

    //பழனி படம் உங்கள் பிரமிட் சாய்மீரா வெளியீடு எனப் பிறகுதான் தெரிந்து கொண்டேன்.//

    பழனி படத்தை பிரமிட் சாய்மீரா எங்கும் வெளியிடவில்லை.