Thursday, January 10, 2008

பிரபல நடிகர் பாண்டியன் காலமானார்!


”பொத்திவெச்ச மல்லிகை மொட்டு” பாட்டு நினைவிருக்கிறதா? அப்பாடலில் ரேவதியுடன் ஆடிபாடிய இளைஞர் பாண்டியன். பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட பாண்டியன் தடதடவென்று பல படங்களில் நடித்து 80களின் இறுதியில் முன்னணி நடிகராக வலம் வந்தார். குடும்பப்பாங்கான படங்களில் கதாநாயகனாக நடித்து தாய்க்குலங்கள் மனதில் இடம்பிடித்தார். கிராமத்துப் படங்களில் பட்டணத்து ஹீரோ என்றால் கூப்பிடு பாண்டியனை என்ற அளவுக்கு அப்போது பிரபலமாக இருந்தார். ஆண்பாவம் போன்ற படங்களில் நடித்த நேரம் அவரது திரையுலக வாழ்க்கையின் உச்சம் என்று சொல்லலாம்.

அவர் அரசியலுக்கு வந்தபின் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைய ஆரம்பித்தது. அதன் பின்னர் வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். நாடோடி தென்றல் படத்தில் இடம்பெற்ற பாண்டியனின் கதாபாத்திரம் நன்கு பேசப்பட்டது. கடைசியாக சிட்டிசன் போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். நிறைய டிவி சீரியல்களிலும் தலைகாட்டினார்.

சிலகாலமாக உடல்நலமின்றி அவதிப்பட்டு வந்த பாண்டியன் தொடர்ந்து மதுரையில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கல்லீரல் செயலிழந்ததாக மருத்துவர்கள் கண்டறிந்தனர். இன்று காலை அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து மரணத்தை தழுவினார். மறைந்த பாண்டியனுக்கு வயது 48. பிரபல நடிகரின் எதிர்பாராத திடீர் மரணத்தால் தமிழ் திரையுலகம் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறது.

4 comments:

  1. said...

    we miss him my father is him fans

  2. said...

    அடாடா!!
    அவர் குடும்பத்துக்கு ஆழந்த அனுதாபங்கள்.

  3. Anonymous said...

    அன்னாரின் பிரிவால் வாடும் அவர்தம் குடும்பத்தார்க்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

  4. Anonymous said...

    last line is a big joke.